செவ்வாய், 29 நவம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 1


குறிஞ்சி வட்டம் செஞ்சியில் மாதம்தோறும் நடந்துவந்த/ இப்போதும் அவ்வப்போது நடந்துவரும் சமூக கலை இலக்கிய நிகவுழ்களுக்கான அமைப்பு. இவ்வமைப்பின் சார்பில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்யவென்றே ஒரு சிறிய கையடக்க அளவில் இலவச இதழ் 4.4.2005 முதல் ஏப்ரல் 2007 வரை 16 இதழ்கள் வெளியிடப்பட்டன. அதில் இடம்பெற்ற ஹெக்கூ கவிதைகள் இங்கே ஒரு தொகுப்பாக பதிவு செய்யப்படுகின்றன.

இவை சமகாலத்தின் பிரதிபளிப்பாகவும், சமூகவியல், சூழலியல், அழகியல், தலித்தியல், பெண்ணியம், தமிழுணர்வு என பலதளங்களில் விரிந்து நம் கருத்திற்கு சுவை பயக்கின்றன.   - ஜெ.ரா



இதழ் - 1 (4.4.2005)

1.                பார்வையற்றோர் பள்ளி
     சுதந்திர தினவிழா
     நிறமில்லா கொடி!
-   நாணற்காடன்

2.                கை நிறைய குங்குமம்
     வைத்துக்கொள்ள மனமில்லை
     மகள் விதவை
-    வி.எஸ்.சங்கீதா

3.                விழுவது எழுவதற்கே
     உணர்த்துகிறது
     மழைத்துளி!
-   இரா.தேவசேனா

4.                எதை எதையோ
     நினைவுபடுத்தும்
     ஞாபக மறதி!
-   க.பாரிஷா

5.               தேர்வு முடிவு
     ஆயத்தமாய்
     சில தூக்குக் கயிறுகள்

                             - இரா.சரவணன் 


1 கருத்து: