செவ்வாய், 6 டிசம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 5




இதழ் - 6 ( 09.2005)

1.                       மேடையில் பேசினார்
        சின்னத்திரை இயக்குநர்
        அழுவாமல்...
-       செஞ்சி தமிழினியன்

2.                  திட்டத்தை நிறைவேற்றியது
      மழைநீரை சேகரித்தபடி
      சாலையில் குழி!
-       செந்தில் பாலா

3.               இடிபாடுகளில் சிக்கியும்
     உயிரோடு இருக்கிறேன்
    பேருந்து பயணம்.
-       கு.கிரிஜா

4.               நின்றது மழை
    எங்கே விழுந்ததோ
    கடைசித்துளி!
-       நாணற்காடன்

5.             தோன்றிய கவிதை
    நசுங்கிப் போனது
   பேருந்து நெரிசலில்...
-       இரா.தேவசேனா


இதழ் - 9 ( 03.2006)

1.                         உண்டு இல்லை என்று
          உண்டில்லாமல் செய்கிறது
          வருடந்தோரும் நுழைவுத்தேர்வு

                          - செந்தில் பாலா

சனி, 3 டிசம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 4


குறிஞ்சி வட்டம் நிகழ்ச்சி பதிவிதழ் இதழ் - 5 ( 08.2005)




1.                       இலவச பொருட்களோடு
        சுடச்சுட விற்பனை
        குங்குமம்
-       சு.கணேஷ்குமார்

2.                   ஆரியன்
       சரியாய்ச் சொன்னால்
       அந்நியன்!

3.                    மரம் நடு விழா
       கூட்ட நெரிசலில்
       மிதிபட்டது கன்று

4.                   பால் கொடுத்தாள் அம்மா
      குழந்தை உறங்கியது
      நீண்டநேரம் அழுதது கள்ளிப்பால்

-       செஞ்சி தமிழினியன்




5.               சலுகைகள் சலுகைகள்
    அரசு பணத்தில்
    ஓட்டு வேட்டை

6.              இந்த இடம்
    இன்னொருவருக்கும் உதவலாம்
    கட்டாதிர்கள் சமாதி

-       செந்தில் பாலா

7.                    திருமணப் பந்தி
       பெருமித்த்தில் மனம்
       அதிகமாய் ஓர் அப்பளம்!

8.                   காட்சிக் கூடம்
       தொங்கும் ஓவியங்கள்
       பறந்து பார்க்கும் ஈ!

9.                   வெளியீட்டு விழா
       நிறையப் பேசினர்
       விற்காமல் புத்தகங்கள்!

-       அமுதபாரதி

10.                  இரும்பிய நோயாளி
         நினைத்து எழுதினார் மருத்துவர்
         இருப்பு குறையும் மருந்து

-       ஆலா




11.           உறங்கும் குழந்தை
         அமைதி காக்கின்றன
         பொம்மைகள்

12.                  நீண்ட ராப்பயணம்
        துணையாய்
        காலடியில் இசை

-       இரா.தேவசேனா

வியாழன், 1 டிசம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 3

குறிஞ்சி வட்டம் நிகழ்ச்சி பதிவிதழ் - 4 இல் இருந்துதான் அதிகமான ஹெக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவ்விதழில் இடம்பெற்ற பாரதிமணியனின் பனங்காய் வண்டி பிற்பாடு அதே தலைப்பில் நூலாக வெளிவந்தது. 







  இதழ் - 4 (07.2005)

1.    பேருந்து இருக்கை
              இடம் பிடித்திருக்கிறது
               ஒற்றை மல்லிகை

2.    மரக்கிளையில் தொங்கும்
              விறகுவெட்டியின்
,             சோற்றுச் சட்டி.
      -       நாணற்காடன்

3.    மார்கழி இரவு
              குளிரில் நீந்தும்
              மீன்கள்
-       சு.கணேஷ்குமார்

4.    காயம் ஆறுவதற்குள்
தீர்ந்து விடுகிறது
மாத்திரை.
-       மு.குணசேகரன்

         



       பனங்காய் வண்டி: பாரதிமணியன்

1.                                  அதிக வட்டி அதிக வட்டி
             முதலீட்டாளர்களுக்கு
              நாமக்கட்டி!

2.                                 சாதி வாழ்க சாதி வாழ்க
             வாழ வேண்டாமா
             சாதி தலைவர்

3.                                மழை நாளில்
             குடையும் தொலையும்
             திருமண வீடு!

4.                               வாங்கிய கடனில் விளைந்த நெல்
             கடன்போக மீந்தது
             பெரிய வைக்கோற்போர்!

5.                                ஐந்து லிட்டர் கேனில்
             ஏழு லிட்டரும் கொள்ளும்
             ரேசன் கடையில்!

6.                                பேருந்தில் பிதுங்கும் கூட்டம்
              நடந்தால் நல்லது
              மாதக்கடைசி!

7.                                   புது டயர் மாற்ற
              கிடைத்த பழைய டயர்
              பையனுக்குக் கிடைத்த புது வண்டி

8.                                    எத்தனையோ புத்தகங்கள்
               வாங்க காசில்லை
               சுண்டல் மடித்த காகிதமே சுவை

9.                                    மின்சாரம் இல்லாத
               புழுக்க ராத்திரி
               படிக்க ஆசை

10.                               கிரிவலம்
               உடனடி பலன்
               கால்வலி!